Mandram vandha song lyrics:
Song Cast:
Movie | Mouna Raagam |
Song | Mandram vandha |
Starring | Mohan, Revathi |
Singer | S.P.Balasubramaniam |
Lyricist | Vaali |
Music Director | Ilayaraja |
Release | 1986 |
Movie Image:

Mandram vandha song lyrics in Tamil & English:
மன்றம் வந்த தென்றலுக்கு
மஞ்சம் வர நெஞ்சமில்லையோ
அன்பே என் அன்பே
தொட்டவுடன் சுட்டதென்ன
கட்டழகு வட்ட நிலவோ
கண்ணே என் கண்ணே
பூபாளமே கூடாதென்னும்
வானம் உண்டோ சொல்
மன்றம் வந்த தென்றலுக்கு
மஞ்சம் வர நெஞ்சமில்லையோ
அன்பே என் அன்பே
தாமரை மேலே நீர்த்துளி போல்
தலைவனும் தலைவியும் வாழ்வதென்ன
நண்பர்கள் போலே வாழ்வதற்கு
மாலையும் மேளமும் தேவையென்ன
சொந்தங்களே இல்லாமல்
பந்த பாசம் கொள்ளாமல்
பூவே உன் வாழ்க்கை தான் என்ன
சொல்……
மன்றம் வந்த தென்றலுக்கு
மஞ்சம் வர நெஞ்சமில்லையோ
அன்பே என் அன்பே
மேடையைப் போலே வாழ்க்கை அல்ல
நாடகம் ஆனதும் விலகிச் செல்ல
ஓடையைப் போலே உறவும் அல்ல
பாதைகள் மாறியே பயணம் செல்ல
விண்ணோடு தான் உலாவும்
வெள்ளி வண்ண நிலாவும்
என்னோடு நீ வந்தால் என்ன
வா……
மன்றம் வந்த தென்றலுக்கு
மஞ்சம் வர நெஞ்சமில்லையோ
அன்பே என் அன்பே
தொட்டவுடன் சுட்டதென்ன கட்டழகு வட்ட நிலவோ
கண்ணே என் கண்ணே
பூபாளமே கூடாதென்னும் வானம் உண்டோ சொல்
மன்றம் வந்த தென்றலுக்கு
மஞ்சம் வர நெஞ்சமில்லையோ
அன்பே என் அன்பே
Mandram vandha thendralukku
manjam vara Nenjam illaiyo
anbae en anbae
Thottavudan suttadhenna kattazhagu Vatta nilavo
kannae en kannae
Boopaalamae koodadhennum vaanam undo
soll……
Mandram vandha thendralukku
manjam vara Nenjam illaiyo
anbae en anbae
Thaamarai melae neerthuli pol
Thalaivanum thalaiviyum vaazhvadhenna
Nanbargal pole vaazhvadharku
Maalaiyum melamum thevaiyenna
Sondhangalae illaamal bandha paasam kollaamal
Poovae un vaazhkaidhaan enna
soll……
Mandram vandha thendralukku
manjam vara Nenjam illaiyo
anbae en anbae
Medaiyai pole vaazhkai alla
Naadagam aanadhum vilagi sella
Odayai pole uravum alla
Paadhaigal maariyae payanam sella
Vinnodudhaan ulaavum velli vanna nilaavum
ennodu nee vandhaal enna
vaa……
Mandram vandha thendralukku
manjam vara Nenjam illaiyo
anbae en anbae
Thottavudan suttadhenna kattazhagu Vatta nilavo
kannae en kannae
Boopaalamae koodadhennum vaanam undo
soll……
Mandram vandha thendralukku
manjam vara Nenjam illaiyo
anbae en anbae
Note:
மௌன ராகம் திரைப்படம் இந்தியாவின் சுதந்திர தினமான 1986 ஆகஸ்ட் 15 அன்று வெளியிடப்பட்டது. சுமாரான பார்வையாளர்களுக்கு திறந்த போதிலும் இது பாக்ஸ் ஆபிஸ் வெற்றியாக மாறியது, 175 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடி மணிரத்னத்தின் திருப்புமுனை திரைப்படமாக விமர்சன ரீதியான பாராட்டைப் பெற்றது.இது தமிழில் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருதை வென்றது.மேலும் மணிரத்னம் தமிழில் சிறந்த இயக்குனருக்கான பிலிம்பேர் மற்றும் சினிமா எக்ஸ்பிரஸ் விருதுகளைப் பெற்றார். மௌன ராகமும் கார்த்திக் கேரியரில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. இத்திரைப்படம் தமிழ் சினிமாவில் பிரபலமான சாஃப்ட்-ஃபோகஸ் ஷாட்கள், ஃபிளேர் ஃபில்டர்கள் மற்றும் பேக்லைட்டிங் போன்ற நுட்பங்களை அறிமுகப்படுத்தியது. இது இந்தியில் 1992 இல் கசக் என்றும், கன்னடத்தில் 1999 இல் சந்திரோதயா என்றும் ரீமேக் செய்யப்பட்டது.