Paravaiye engu irukkiraai song lyrics in Tamil/English – Katrathu tamizh – A2Z Tamil Song Lyrics
Paravaiye engu irukkiraai song lyrics:
Song Cast:
Movie | Katrathu tamizh |
Song Title | Paravaiye engu irukkiraai |
Singer | Ilayaraja |
Lyricist | Na.Mudhukkumar |
Music | Yuvan Shankar Raja |
Year | 2007 |
Paravaiye engu irukkiraai song lyrics in Tamil/English:
என் வாழ்க்கையில வந்தது மூனே மூனு லெட்டர்…
ஸ்டில் ஐ ரிமெம்பர் மை ஃபர்ஸ்ட் லெட்டர்…
பிரபா!
நீ என்ன தேடிருப்பனு எனக்கு தெரியும்…
நானும் அம்மாவும் இங்க மகாராஷ்டிரா ல தூரத்து மாமா வீட்டுல இருக்கோம்…
நீ வர்ரதுக்கோ லெட்டர் எழுதுரதுக்கோ ஏத்த சமயம் வர்ரப்போ நா சொல்றேன்…
நேரத்துக்கு சாப்டு…
வாரத்துக்கு மூனு நாளாவது குளி…
அந்த சாக்ஸ தொவச்சு போடு…
நகம் கடிக்காத…
கடவுள வேண்டிக்கோ… ஆனந்தி ஆனந்தி…
பறவையே எங்கு இருக்கிறாய்…
பறக்கவே என்னை அழைக்கிறாய்…
தடயங்கள் தேடி வருகிறேன் அன்பே…
பறவையே எங்கு இருக்கிறாய்…
பறக்கவே என்னை அழைக்கிறாய்…
தடயங்கள் தேடி வருகிறேன் அன்பே…
அடி என் பூமி தொடங்கும் இடம் இது நீதானே…
அடி என் பாதை இருக்கும் இடம் இது நீதானே…
பார்க்கும் திசைகள் எல்லாம் பாவை முகம் வருதே…
மீன்கள் கானலின் நீரில் தெரிவதுண்டோ…
கண்கள் பொய்கள் சொல்வதுண்டோ…
நீ போட்ட கடிதத்தின் வரிகள் கடலாக…
அதில் மிதந்தேன் பெண்ணே நானும் படகாக…
பறவையே எங்கு இருக்கிறாய்…
பறக்கவே என்னை அழைக்கிறாய்…
தடயங்கள் தேடி வருகிறேன் அன்பே…
உன்னோடு நானும் போகின்ற பாதை…
இது நீலாதோ தொடுவானம் போலவே…
கதை பேசி கொண்டே வா காற்றோடு போவோம்…
உரையாடல் தீர்ந்தாலும்…
உன் மெளனங்கள் போதும்…
இந்த புல் பூண்டும் பறவை யாவும் போதாதா…
இனி பூலோகம் முழுதும் அழகாய் போகாதா…
முதல் முறை வாழ பிடிக்குதே…
முதல் முறை வெளிச்சம் பிறக்குதே…
முதல் முறை முறிந்த கிளை ஒன்று பூக்குதே…
முதல் முறை கதவு திறக்குதே…
முதல் முறை காற்று வருகுதே…
முதல் முறை கனவு பலிக்குதே… அன்பே…
ஏழை காதல் மலைகள் தனில் தோன்றுகின்ற ஒரு நதியாகும்…
மண்ணில் விழுந்தும் ஒரு காயமின்றி உடையாமல்…
உருண்டோடும் நதியாகிடும்…
இதோ இதோ இந்த பயணத்திலே…
இது போதும் கண்மணி வேறென்ன நானும் கேட்பேன்…
பிரிந்தாலும் மனதிலே…
இந்த நொடியில் என்றும் வாழ்வேன்…
இந்த நிகழ்காலம் இப்படியே தான் தொடராதா…
என் தனியான பயணங்கள் இன்றுடன் முடியாதா…
முதல் முறை வாழ பிடிக்குதே…
முதல் முறை வெளிச்சம் பிறக்குதே…
முதல் முறை முறிந்த கிளை ஒன்று பூக்குதே…
முதல் முறை கதவு திறக்குதே…
முதல் முறை காற்று வருகுதே…
முதல் முறை கனவு பலிக்குதே… அன்பே…
ஆனந்தி ஆனந்தி ஆனந்தி…
ஊர் வந்துருச்சுனு நெனைக்கிறேன்…
எங்க எறங்கனும்…
முடிவு…..
En vaazhkayila vanthathu mooney moonu letter…
Still I remember my first letter…
Praba!
Nee enna theydieruppanu enakku theyriyum…
Naanum ammavum enga Maharashtra la dhoorathu mama veetula erukom…
Nee varradhukko letter eludhuradhukko eatha samayam varrappo naan solren…
Nerathukku saapdu…
Varathukku moonu naalavadhu kuli…
Andha socks ahh thovachu podu…
Nagam kadikkadha…
Kadavula vendikko…Anandhi anandhi…
Paravaiye engu irukkiraai…
Parakkave ennai alaikkirai…
Dhadayangal thedi varukiren…anbe…
Paravaiye engu irukkiraai…
Parakkave ennai alaikkirai…
Dhadayangal thedi varukiren…anbe…
Adi en boomi thodangum edam edhu needhaaney…
Adi en paadhai thodangum edam edhu needhaaney…
Paarkkum thisaigal ellam paavai mugam varudhey…
Meengal kaanalin neeril therivadhundo…
Kangal poigal solvadhundo…
Nee pootta kadithathin varigal kadalaaga…
Adhil medhandheney penne naanum padagaaka…
Paravaiye engu irukkiraai…
Parakkave ennai alaikkirai…
Dhadayangal thedi varukiren…anbe…
Unnodu naanum pogintra paadhai…
Edhu neeladho thoduvaanam polavey…
Kadhai pesi konde vaa kaatrodu povom…
Uraiyaadal theerndhalum…
Un mounangal podhum…
Endha pul poondum paravai yaavum podhaadha…
Eni poologam muzhudhum alagaai pogaadha…
Mudhal murai vaazha pidikkudhey…
Mudhal murai Velicham pirakkudhey…
Mudhal murai murindha kilai ondru pookkudhey…
Mudhal murai kadhavu thirakkudhey…
Mudhal murai kaatru varugudhey…
Mudhal murai kanavu palikkudhey…anbe…
Ealai kaadhal malaigal thanil thondrukindra oru nadhiyaagum…
Mannil vizhundhum oru kaayamintri udaiyaamal urundodum nadhiyaakidum…
Edho edho endha payanathiley…
Edhu podhum kanmani verenna naanum ketpean…
Pirindhalum manadhiley Endha nodiyil entrum vaalven…
Endha nigalkaalam eppadiye thaan thodaraatha…
En thaniyaana payanangal entrudan mudiyaathaa…
Mudhal murai vaazha pidikkudhey…
Mudhal murai Velicham pirakkudhey…
Mudhal murai murindha kilai ondru pookkudhey…
Mudhal murai kadhavu thirakkudhey…
Mudhal murai kaatru varugudhey…
Mudhal murai kanavu palikkudhey…anbe…
Anandhi Anandhi Anandhi…
Oor vandhuruchunu nenaikkuren…
Enga eranganum…
END…..
Note:
கற்றது தமிழ் திரைப்படம் 2007 ஆம் ஆண்டு வெளிவந்த உளவியல் த்ரில்லர் படமாகும்.இது ராம் எழுதி மற்றும் இயக்கியது. இது அவரின் முதல் படம். சல்மாரா முகமது ஷரீஃப் தயாரித்த இதில் ஜீவா, அஞ்சலி மற்றும் கருணாஸ் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படம் அக்டோபர் 6, 2007 அன்று ஏகமனதாக விமர்சன ரீதியான பாராட்டைப் பெற்றது